9 வது தெற்காசிய பிராந்திய மாநாட்டில் (2019) இலங்கையின் வெளிவிவகார செயலாளர் ஆற்றிய உரையின் தமிழ் வடிவம்

இலங்கையில் சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தினை செயற்படுத்துவதிலான வெற்றிகள் மற்றும் சவால்கள்
இலங்கையின் சர்வதேச மனிதாபிமான சட்டம் மீதான சர்வதேச உறுதிப்பாட்டின் ஆரம்ப வெளிப்பாடாக கருதப்படும் வகையில், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துடனான ஒப்பந்தத்தில் இலங்கை 1989 ஆம் ஆண்டில் கையைழுத்திட்டது. கடந்த நான்கு தசாப்தங்களாக இலங்கை சர்வதேச மனிதாபிமான சட்டத்தை செயற்படுத்துவதில் கிடைத்த வெற்றிகள் மற்றும் அதற்கான சவால்கள் தொடர்பான கள ஆய்வுகளை உலகிற்கு வழங்கியுள்ளதுடன், அவற்றுள் பலவற்றுக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மதிப்புமிக்க பங்காளியாக இருந்துள்ளது. 'பாதுகாப்பிற்கான' உறுதிப்பாட்டில் இலங்கையின் அனுபவமானது, வடகிழக்கிற்கான உணவுப் படையினர் மூலமாகவும், 30 ஆண்டுகால உள்நாட்டு மோதல்களின் போது புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் உள்ளடங்கலாக மேற்கொள்ளப்பட்ட தேசிய எதிர்ப்புத் திட்டத்தின் 100% முன்னெடுப்பு மூலமாகவும் உறுதிப்படுத்தபட்டுள்ளது. 2004 சுனாமியின் பின்னரான விரைவான பிரதிபலிப்பு, மோதலுக்கு பிந்தைய காலகட்டத்திலான நிலக்கண்ணிவெடிகளை அகற்றுதல் மற்றும் மீள்குடியேற்றம், காணாமல் போனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான முயற்சிகள் மற்றும் காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் பணிகள், முஸ்லிம் பயங்கரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு தின குண்டுவெடிப்பின் பின்னர் நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து இடங்களுக்குமான மற்றும் இலங்கையில் தங்கியுள்ள அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கான சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தடையின்றிய அணுகல் ஆகியன ஏனைய விடயப்பரப்புக்களில் உள்ளடங்கும்.
மேலும், நிராயுதபாணியாக்கம் மற்றும் ஆயுதரப்பரவலைத் தவிர்க்கும் வகையில், மோதலின் அழிவுகளைத் தடுப்பதிலும், தணிப்பதிலும் இலங்கை அதன் சர்வதேச தரத்தில் முன்னணியில் இருந்ததுடன், 2015 ஆம் ஆண்டில், அபாயகரமான தானியங்கி ஆயுத அமைப்புகள் தொடர்பான கலந்துரையாடல்களை அரச மட்டத்திற்கு நகர்த்துவதற்கான ஒருமித்த கருத்தை, சில வழக்கமான ஆயுதங்களுக்கான மாநாட்டின் அரச தரப்பினர்கள் கூட்டத்திற்கான தனது தலைமைத்துவக் காலத்தில் உருவாக்கியிருந்தது. ஆயுதங்களை அபிவிருத்தி செய்வதற்கான திறன்களைக் கொண்ட அரசுகளை, தேசியரீதியில் தடைகளை ஏற்படுத்துவதில் உடனடி நடவடிக்கைகளை முன்னெடுக்க இலங்கை ஊக்குவித்துள்ள அதே நேரத்தில், ஒழுங்குமுறை விதிமுறைகளை அர்த்தமுள்ள மனிதாபிமான கட்டுப்பாட்டுடன் பிணைப்புள்ளதொரு சட்டக் கட்டமைப்பின் மைய உந்துதலாக வழங்குவதற்கும் வலியுறுத்தியது.
1957 முதல் உலகெங்கிலும் உள்ள ஐ.நா. அமைதிகாக்கும் நடவடிக்கைகளில் இலங்கைப் படைகள் பங்கேற்பதன் மூலமாகவும் பாதுகாப்பு மற்றும் தடுப்பு குறித்த மனிதாபிமானமிக்க பார்வை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. புலிகளுடனான குறைந்தளவிலான மற்றும் அதிகளவிலான தீவிர மோதல்களில் இலங்கையின் சமீபத்திய கால அனுபவத்தைப் பொறுத்தவரை, அமைதி காத்தல் மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்குதல் போன்ற அனைத்து அம்சங்களிலும் விரிவான தொழில் அனுபவமுள்ள சர்வதேச தரத்திலான துருப்புகளை இலங்கை அனுப்பியது.
1940 களில் ஜெனீவா உடன்படிக்கைகள் ஆரம்பத்தில் வடிவமைக்கப்பட்ட சூழலைக் காட்டிலும், சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கொள்கைகள் ஆயுத மோதல்களின் தற்போதைய சூழலில் புரிந்து கொள்ளப்பட வேண்டும். கடந்த காலங்களைப் போலல்லாமல், தற்போது மோதல்கள் பெரும்பாலும் உள்ளக ஆயுத மோதல்களாக, பொதுவாக அதிகம் நீடித்த மற்றும் பெரும்பாலும் அரசு சாராத செயற்பாட்டாளர்களை உள்ளடக்குவதுடன், சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் பின்னணியில் மனிதத்துக்கு எதிரான புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வழக்கமான போர் செயன்முறைகளுக்கு அப்பால் நகர்ந்துள்ளன. ஆயுத மோதல்களில் விகிதாசாரத்துடன், பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போரின் எண்ணக்கரு, சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்டுள்ள சட்டபூர்வமான கடமைகளுக்கு கட்டுப்படுவதற்கான அரசுகள் மற்றும் ஆயுதக் குழுக்களின் நடைமுறைத் திறன் தொடர்பான பிரச்சினைகள் ஆகியன கடுமையாக போட்டியிடுகின்றன. சர்வதேச மோதல்களில் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் பொருந்தக்கூடிய தன்மை, அனைத்து தரப்பினரும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தை முழுமையாக பின்பற்றுவதை உறுதி செய்வதிசெய்வதில் உள்ள தடைகள் போன்றன அரசு மற்றும் அரசு சாராத செயற்பாட்டாளர்களிடையேயான சமத்துவம் பற்றிய கேள்விகளை எழுப்புகின்றது.
சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் பல்வேறு சூழல்களில் அதன் பயன்பாடு குறித்த முன்னேற்றங்களைப் பற்றி விவாதிப்பதில், இலங்கை எதிர்கொள்ளும் வெற்றிகளும் சவால்களும் எதிரொலிப்பதாகவும், அறிவுறுத்துவதாகவும் அமைந்துள்ளதுடன், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தனது பணியில் 'நடுநிலைமையை' போற்றத்தக்க வகையில் உறுதி செய்துள்ளது. சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் பயன்பாட்டை அரசியல்மயமாக்குவதில் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதோடு, எல்லாத் தீர்வும் எல்லா சூழ்நிலைகளுக்கும் பொருத்தமானதாக அமையாது என்பதுடன், மோதல் சூழ்நிலையை மதிப்பிடுவதில் உள்ளூர் உணர்திறன் மற்றும் நுணுக்கங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
அரசுகள் அரசியலற்ற ஆரோக்கியமானதொரு உரையாடலைப் பேணி சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வது வலியுறுத்தப்படல் வேண்டும். ஜெனீவா சாசனங்களுக்கான 32 வது கூட்டத்தின் நிறைவிலிருந்து தொடர்ந்து நடைபெற்று வரும் கலந்துரையாடல்களில் இது ஒரு முக்கிய விடயமாக பேசப்படுகிறது. மனிதாபிமான இராஜதந்திரத்தில் ஈடுபடுவதிலும், மனிதத் துன்பங்களைத் தளர்த்துவதிலும், எமது எல்லா நாடுகளுக்கும் இது சிறந்த சேவையை வழங்கும்.