COMPUTER ETHICS & CYBER SECURITY


This Article was published in 2023 in the magazine 'SAALARAM' issued by Paddiruppu Zonal Education Office - EastLanka!
இக் கட்டுரையானது 2023 இல் கிழக்கிலங்கை-பட்டிருப்பு கல்வி வலயத்தால் வெளியிடப்பட்ட 'சாளரம்' சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்டது!





இக்கட்டுரையின் நோக்கங்கள் :

  • இணைய குற்றங்கள் (cyber-crimes) பற்றி அறிந்து கொள்ளுதல்.
  • இணைய உலகத்தில் இணையப் பாதுகாப்பு பற்றிய வழி காட்டுதல்கள் மற்றும் தேவைகள் (guidelines & need for ethics in cyber-world) பற்றி அறிதல்.
  • இணையப் பாதுகாப்பு பற்றிய சிக்கல்கள் (issues related to cyber-crimes) பற்றி அறிதல்.
  • ஈட்டுவழங்கி சேவையகம் மற்றும் தீச்சுவர் செயல்பாடுகள் (functionality of firewalls & proxy servers) பற்றி அறிதல்.
  • மறையாக்கம் மற்றும் குறியாக்கத்தின் (encryption & decryption) அடிப்படை பற்றி அறிதல்.
  • டிஜிட்டல் சட்டங்கள், விதிகள், செயல்படுத்துதல் (knowledge on Digital Act) பற்றி அறிதல்.


உள்ளடக்கம் :

  1. அறிமுகம்
  2. கணிப்பொறி நன்னெறி (COMPUTER ETHICS)
  3. இணைய குற்றம் (CYBER CRIME)
  4. இணையப் பாதுகாப்பு மற்றும் அச்சுறுத்தல்கள் (CYBER SECURITY & THREATS)
  5. டிஜிட்டல் சட்டங்கள் அறிமுகம் (INTRODUCTION TO DIGITAL LAWS)





1. அறிமுகம்

இருபதாம் நூற்றாண்டில் இணைய குற்றமானது வணிக அமைப்புகளுக்கு ஒரு பாரிய அச்சுறுத்தலாகவே உள்ளது.
இணைய குற்றங்கள் பரவலாக கணிப்பொறியிலும், வலைப்பின்னல்களிலும் (network) நிகழ்த்தப்படுகிறது.
இதனால் வளர்ந்து வரும் சமூகத்தின் மீது குற்றவாளிகளும் பொறுப்பற்ற தனிமனிதர்களும் இணையத்தை பயன்படுத்தி தாக்குதல்களை தொடுக்கலாம்.
இது தகவல் தொழில்நுட்ப பயனாளிகள் எதிர்கொள்ளநேரிடும் முக்கிய சவாலாக உள்ளது.
இணையம் மிகச்சிறந்த தகவல் தொழில்நுட்ப சாதனம். இணையத்தின் மூலம் நாம் அனைத்தையும் தெரிந்துகொள்ளலாம்.
தகவல் தொழில் நுட்பத்தின் நோக்கங்கள் பலவாக இருந்தாலும், கணிப்பொறிகள், கைப்பேசிகள் மற்றும் இணையம் வழியாக அதை தவறாக பயன்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன. மதிப்பு மிக்க எமது தரவுகள் (data) தவறான கைகளில் கிடைத்து விடாமல், சிறப்பு பாதுகாப்பு கொடுத்து பாதுகாக்கப்படல் வேண்டும்.




2. கணிப்பொறி நன்னெறி (COMPUTER ETHICS)

கணிப்பொறி நன்னெறி தொடர்பாகப்‌ பரவலாக எடுத்தக்காட்டப்படும்‌ குறிப்பு
கணிப்பொறி நன்னெறிக்‌ கழகம்‌ வரையறுத்துள்ள கணிப்பொறி நன்னெறிக்கான பத்துக்‌ கட்டளைகள்‌ ஆகும்‌. (Ten Commandments of Computer Ethics written by The Computer Ethics Institute)

அவை கீழே தரப்பட்டுள்ளன :

  1. பிறருக்குத்‌ தீங்கு விளைவிக்குமாறு ஒரு கணிப்பொறியைப்‌ பயன்படுத்தாதீர்கள்‌

  2. பிறரின்‌ கணிப்பொறிப்‌ பணியில்‌ தலையிடாதீர்கள்‌

  3. பிறரின்‌ கணிப்பொறிக்‌ கோப்புகளை நோட்டம்‌ விடாதீர்கள்

  4. கணிப்பொறியை பயன்படுத்தி களவாடாதீர்கள்

  5. பொய்‌ சாட்சி உருவாக்க கணிப்பொறியைப்‌ பயன்படுத்தாதீர்கள்

  6. நீங்கள்‌ விலை கொடுத்து வாங்காத பதிப்புரிமை உள்ள மென்பொருளை நகலெடுக்காதீர்கள்‌ அல்லது பயன்படுத்தாதீர்கள்‌

  7. பிறருடைய கணிப்பொறி வளங்களை அனுமதியின்றியோ, உரிய கட்டணமின்றியோ பயன்படுத்தாதீர்கள்‌

  8. பிறரின்‌ புலமைசார்‌ படைப்புகளை முறைகேடாக அபகரித்துக்‌ கொள்ளாதீர்கள்

  9. நீங்கள்‌ உருவாக்கும்‌ மென்பொருள்‌ அல்லது நீங்கள்‌ வடிவமைக்கும்‌ முறைமையின்‌ சமூக விளைவுகளைச்‌ சற்றே எண்ணிப்‌ பாருங்கள்

  10. உடன்‌ வாழும்‌ மனிதர்களின்‌ உணர்வுகளைக்‌ கணக்கில்‌ கொண்டு உரிய மரியாதை வழங்கும்‌ வகையிலேயே எப்போதும்‌ கணிப்பொறியைப்‌ பயன்படுத்துங்கள்
சில பொதுவான நன்னெறி பிரச்சினைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன :
  1. இணைய குற்றம் (cyber crime)
  2. மென்பொருள் உரிமையில்லா நகலாக்கம் (software piracy)
  3. அங்கீகரிக்கப்படாத அணுகுதல் (unautorized access)
  4. ஹேக்கிங் (Hacking)
  5. கணிப்பொறியை பயன்படுத்தி மோசடி செய்தல் (Use of computers to commit fraud)
  6. நச்சு நரல்(Virus) மூலம் நாசவேலை
  7. கணிப்பொறி மூலம் தவறான கூற்று (false claims) உருவாக்குதல்.




3. இணைய குற்றம் (CYBER CRIME)

இணைய குற்றம் என்பது அறிவுசார் குற்றமாகும் (white-collar crime).
இந்த குற்றங்களை செய்வோர் பொதுவாக கணிப்பொறியை திறன்பட இயக்குபவராக இருப்பார்கள்.

கணிப்பொறி குற்றங்களில் சில உதாரணமாக கொடுக்கப்பட்டுள்ளன :

  1. தீம்பொருள் (Malware) :
    கணிப்பொறி செயல்பாடுகளை நடத்துதல், செயல்பாடுகளை அனுமதி இல்லாமல் கண்காணித்தல்.

  2. அரண் உடைத்தல் (Cracking) :
    சட்டவிரோதமாக அடுத்த பயனரின் பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல்லை சேகரித்து பயனரின் கணக்குகளில் நுழைதல்.

  3. ஸ்பேம் (Spam) :
    அறியப்படாத மூலத்திலிருந்து பெறுபவர் அறியப்பட்ட ஆதாரத்தை அனுப்பி தீங்கிழைக்கும் நடைமுறை.

  4. சொந்தத்‌ தரவுகளை முறைகேடாகப்‌ பயன்படுத்துதல்‌/ விற்றல்‌

  5. கணிப்பொறி நேரத்தைக்‌ களவாடல்‌ :
    நிறுவனங்களில்‌ பயன்படுத்தப்படும்‌ கணிப்பொறிகளில்‌ நிறுவனத்துக்குத்‌ தெரியாமலேயே வேறுபிற மென்பொருள்கள்‌ இயங்கிக்‌ கொண்டிருக்கின்றன.

  6. வன்பொருள்‌ அல்லது மென்பொருள்களின்‌ உரிமையிலா நகலாக்கம்‌ (piracy)



    உரிமையிலா நகலாக்கம்‌ செய்ய நாம்‌ முனைவதற்குக்‌ காரணம்‌ :
    1. நாம்‌ இலவசப்‌ பொருள்களை விரும்புகிறோம்‌.
    2. நம்மால்‌ இலவசமாகப்‌ பெறமுடியும்‌ என்கிறபோது, எதற்காக விலை கொடுத்து வாங்க வேண்டும்‌ என்கிற எண்ணம்‌.
    3. நமது எண்ணமும்‌ செயல்பாடுகளும்‌ சுயநலத்தை அடிப்படையாய்க்‌ கொண்டவை.
    4. குறைந்த ஆபத்து விளைகிற, பண ரீதியாகப்‌ பயன்தருகிற ஒன்றைப்‌ பெறும்‌ வாய்ப்புக்‌ கிடைக்கும்‌ எனில்‌ அதைத்‌ தயங்காமல்‌ செய்து முடிப்போம். நாம்‌ வாழும்‌ முதலாளித்துவ சமூகம்‌ அவ்வாறு நம்மைப்‌ பழக்கியிருக்கிறது.

  7. ஹேக்கிங் (Hacking) :
    ஒரு கணிப்பொறியின் உரிமையாளரின் அனுமதி இல்லாமல், தனிப்பட்ட தரவு அல்லது கடவுச் சொல்லை குற்றம் சார்ந்த நடவடிக்கையாகவோ அல்லது பொழுதுபோக்கிற்காகவோ திருடுதல்




  8. 4. இணையப் பாதுகாப்பு மற்றும் அச்சுறுத்தல்கள் (CYBER SECURITY & THREATS)

    இணையப் பாதுகாப்பு என்பது இணைய தாக்குதல்களின் ஆபத்தை குறைக்கும் மற்றும் நிறுவனங்கள், தனிநபர்களை பாதுகாக்கும், கணிப்பொறி சார்ந்த அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்கும் பல்வேறு தொழில்நுட்பங்கள், செயல்முறைகள் மற்றும் நடவடிக்கைகள் ஆகியவற்றின் தொகுப்பாகும்.

    4.1. இணையத் தாக்குதல்களின் வகைகள் :

    1. நச்சு நிரல் (Virus)
      ஒரு நச்சு நிரல் என்பது கணிப்பொறி குறியீட்டின் ஒரு சிறிய பகுதி ஆகும். அது தன்னை மீண்டும் மீண்டும் ஒரு கணிப்பொறியில் இருந்து மற்றொரு கணிப்பொறிக்கு கோப்புடன் இணைக்கும் வகையில் பரவுகிறது.

    2. வோர்ம்ஸ் (Worms)
      வோர்ம்ஸ் என்பது சுயமாக திரும்ப திரும்ப வந்து இணைத்துக் கொள்ள நிரல்கள் தேவை இல்லை. வோர்ம்ஸ் தொடர்ந்து பாதிப்புக்குட்படுத்தி பலவீனங்களை கண்டுபிடித்து தனது நிரலருக்கு தெரிவிக்கிறது.

    3. ஸ்பைவேர் (Spyware)
      கணிப்பொறியின் இணைப்புக்களை திறக்கும் போது தானாகவே கணிப்பொறியில் நிறுவப்படலாம். இணைப்புகளில் கிளிக் செய்யும் போதும் பாதிக்கப்பட்ட மென்பொருளை பதிவிறக்கம் செய்வதன் மூலமும் ஸ்பைவேர் நிறுவப்படலாம்.

    4. ரேன்சம்வேர் (Ransomware)
      ஒரு கணிப்பொறியில் இணைய தாக்குதல்களை தொடங்கிய பிறகு பணம் கோரி தீங்கு இழைக்கத் திட்டமிடுதல். இந்த தீம்பொருள் குற்றவாளிகளுக்கிடையே பிரபலமடைந்து ஒவ்வொரு வருடமும் நிறுவனங்களுக்கு மில்லியன் கணக்கான செலவுகளை ஏற்படுத்துகிறது.


    4.2. இணையப் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் (CYBER SECURITY THREATS) :

    பல்வேறு வகையான இணையப் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் கீழே வகைப்படுத்தப்பட்டுள்ளன :

    1. ஃபிஷிங் (Phishing) :
      ஃபிஷிங் என்பது கணிப்பொறி குற்றத்தின் ஒரு வகை ஆகும். கடவுச்சொல் மற்றும் கடனட்டை எண்கள் உள்ளிட்ட பயனர் தரவை திருடுவதற்கு பயன்படுத்தப்படும் ஒரு மின்னஞ்சல் ஆகும்.

    2. பார்மிங் (Pharming) :
      பார்மிங் என்பது பயனரின் அனுமதி இல்லாமல் தவறான வலை தளங்களை நோக்கி பயனரை தவறாக வழி நடத்தி பயனரை மோசடி செய்ய வலைதளத்தின் போக்கை திசை திருப்பும் ஹேக்கர்களின் ஒரு இணையத் தாக்குதல் ஆகும்.

    3. குக்கி (Cookies) :
      குக்கீ என்பது பயனர் இணையத்தில் உலாவும்போது (browsing) வலை தளத்திலிருந்து (website) பயனரின் வலை மேலோடிக்கு (web browser) அனுப்பப்பட்டு சேமித்து வைக்கப்படும் சிறிய தரவு (small pieces of text) ஆகும்.

      வலைத்தளங்கள் பொதுவாக பின்வரும் காரணங்களுக்காக குக்கீகளைப் பயன்படுத்துகின்றன

      1. குக்கிகள் பயனர் பற்றிய தனிப்பட்ட தகவல்களை சேமித்து வைக்க உதவும்.
      2. இணையத்தளத்தைப் பார்வையிட்டவர்கள் பற்றிய தகவல்களைச் சேகரிக்க உதவும்.
      3. பார்வையாளர்கள் தளத்திற்கு எத்தனை தடவைகள் வருகிறார்கள் மற்றும் அவர்கள் தளத்தில் எவ்வளவு காலம் இருக்கிறார்கள் என்பதைக் கண்காணிக்க உதவும்.

      குக்கீகள் தாங்களாகவே பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்தாது.
      எனினும், பயனரைப் போல் ஆள்மாறாட்டம் செய்ய, நிதி தரவுகளை சேகரிக்க அவர்களின் கணக்குகளை அணுக அல்லது உலாவியில் சேமிக்கப்படும் கடவுச்சொற்களை திருடுவதற்கு அவற்றை இணைய குற்றவாளிகள் பயன்படுத்தலாம்.
      இவை தீம்பொருளைப் (malware) பரப்பி ஆபத்தான இணையதளங்களைப் பார்க்க பயனரைத் தூண்டும்.


    4.3. இணையப் பாதுகாப்பு வழிமுறைகள் (CYBER SECURITY GUIDELINES) :

    4.3.1. தரவுப்‌ பாதுகாப்பு (DATA SECURITY) :

    கீழ்க்காணும்‌ வழிமுறைகள்‌ சிலவற்றைப்‌ பயன்படுத்தி ஒருவரின்‌ சொந்தத்‌ தரவுகளைப்‌ பாதுகாத்துக்‌ கொள்ள முடியும்‌.

    1. நேரடிப்‌ பாதுகாப்பு (PHYSICAL SECURITY) :
      கணிப்பொறி வளங்களை அணுகுவோர்க்குக்‌ கட்டுப்பாடு விதிப்பதன்‌ மூலம்‌ இப்பாதுகாப்பை வழங்கிட முடியும்‌.

    2. சொந்தப்‌ பாதுகாப்பு (PERSONAL SECURITY) :
      சொந்தப்‌ பாதுகாப்பு என்பது, அனுமதி பெற்றவர்கள்‌ மட்டுமே கணிப்பொறி முறைமைக்குள்‌ நுழைய முடியுமாறு மென்பொருளைத்‌ தகவமைப்பதைக்‌ குறிக்கிறது. பயனர்‌ பெயர்‌ (User ID) மற்றும்‌ கடவுச்‌ சொல்‌ (Password) வழங்குதல்.

    3. பணியாளர்‌ பாதுகாப்பு (PERSONNEL SECURITY) :
      பணியாளர்‌ பாதுகாப்பு என்பது, கணிப்பொறி முறைமையையும்‌, தரவுகளையும்‌ நேர்மையற்ற அல்லது கவனக்குறைவான பணியாளர்களிடமிருந்து பாதுகாப்பதைக்‌ குறிக்கிறது.


    4.3.2. ஈட்டுவழங்கி சேவையகம் மற்றும் தீச்சுவர் (FIREWALL & PROXY SERVERS)

    ஈட்டுவழங்கி சேவையகம் மற்றும் தீச்சுவர் என்பது கணிப்பொறி வலையமைப்பு பாதுகாப்பு அடிப்படை அமைப்பாகும் (network security).
    பாதுகாப்பு அடிப்படையில் உள்வரும் மற்றும் வெளிச் செல்லும் வலையமைப்பு போக்குவரத்து (incoming & outgoing network traffic) போன்றவற்றை முன் வரையறுக்கப்பட்ட பாதுகாப்பு விதிகளின் அடிப்படையில் (based on predefined security rules) கண்காணித்து கட்டுப்படுத்துகின்றன.
    தீச்சுவர் பொதுவாக குறும்பரப்பு இணையம் (LAN) மற்றும் விரிபரப்பு இணையத்திற்கும் (WAN) இடையே ஒரு சுவராக அமைகிறது.

    ஒரு தீச்சுவர் எவ்வாறு வேலை செய்கிறது என்பதைப் பற்றிய ஓர் விளக்கம்:

    ஒரு ஈட்டுவழங்கி சேவையகம் இறுதி பயனர்களுக்கும் (end users) , வலை சேவையகத்திற்கும் (web server) இடையில் இடைத்தரகராக (intermediary) செயல்படுகின்றன.


    4.3.3. குறியாக்கம் மற்றும் மறை குறியாக்கம் (ENCRYPTION & DECRYPTION)

    குறியாக்கமானது எளிய உரைத் தரவை (plain text) சீரற்ற மற்றும் சிக்கனமான தரவுகளாக (cipher-text) மொழிபெயர்த்தலாகும்.
    மறைகுறியாக்கம் என்பது சீரற்ற மற்றும் சிக்கனமான தரவுகளை மீண்டும் எளிய உரைக்கு மாற்றுவதற்கான தலைகீழ் செயல்முறையாகும்.

    குறியாக்கமும் மறைகுறியாக்கமும் குறியாக்கவியலால் (cryptography) செய்யப்படுகிறது.

    தகவல் தொடர்பு அமைப்பில் (communication system), (எ.கா.Internet, ecommerce) தரவு பரிமாற்றப்படும்போது தரவைப் பாதுகாக்க குறியாக்கம் (Encryption) பயன்படுத்தப்படுகிறது.
    அதனால் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே தகவலை அணுக முடியும்.




    5. டிஜிட்டல் சட்டங்கள் அறிமுகம் (INTRODUCTION TO DIGITAL LAWS)

    21 ஆம் நூற்றாண்டில் ICT ஐப் பயன்படுத்துவதில் டிஜிட்டல் சட்டங்கள் (Digital Laws) முக்கிய பங்கு வகிக்கின்றன.
    ஏனெனில் இது மின்னணு பரிவர்த்தனைகளைச் (electronic transactions) செய்வதற்கு தேவையான சட்டச் சூழலை வழங்குகிறது.
    மேலும், மின்னணு பரிவர்த்தனைகளின் பயன்பாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் செயல்பாடுகள்
    இலங்கையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கணினி குற்றவியல் சட்டங்களால் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

    1. INFORMATION & COMMUNICATION TECHNOLOGY ACT (No. 27 of 2003)
      தொழில்துறையின் நலன்களைக் கருத்தில் கொண்டு, தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் தொடர்பான தேசியக் கொள்கை வரைவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் என வழங்குகிறது.

    2. INTELLECTUAL PROPERTY ACT (No. 36 of 2003)
      புலமைச் சொத்து தொடர்பான பதிவு, கட்டுப்பாடு மற்றும் நிர்வாகத்திற்கான திறமையான நடைமுறைகளை வழங்குவதற்கான ஒரு சட்டம்.

    3. ELECTRONIC TRANSACTIONS ACT (No. 19 of 2006)
      ஒப்பந்தங்களை உருவாக்குதல், தரவுச் செய்திகளை உருவாக்குதல் மற்றும் பரிமாற்றம் செய்தல், மின்னணு ஆவணங்கள், மின்னணுப் பதிவுகள் மற்றும் பிற தகவல் தொடர்புத் துறைகளை அங்கீகரித்து எளிதாக்குவதற்கான மற்றும் ஒரு சான்றுப்படுத்தும் அதிகாரியை நியமனம் செய்தல் மற்றும் சான்றுப்படுத்தும் சேவை வழங்குநர்களின் அங்கீகாரம் மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்களை வழங்குவதற்கான ஒரு சட்டம்.

    4. COMPUTER CRIME ACT (No. 24 of 2007)
      கணினி குற்றத்திற்கான அடையாளத்தை வழங்குவதற்கும் மற்றும் விசாரணைக்கான நடைமுறையை வழங்கவும் மற்றும் இத்தகைய குற்றங்களைத் தடுத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்களை வழங்குவதற்குமான ஒரு சட்டம்.

    5. PERSONAL DATA PROTECTION ACT (No.09 Of 2022) :
      தனிப்பட்ட தரவைச் செய்முறைப்படுத்துவதனை ஒழுங்கு படுத்துவதனை ஏற்பாடுசெய்வதற்கும், தனிப்பட்ட தரவைப் பாதுகாத்தல் தொடர்பாகத் தரவுடன் தொடர்பு பட்டோரின் உரிமைகளை அடையாளங்கண்டு பலப்படுத்துவதற்கும், தரவுப் பாதுகாப்பு அதிகாரசபையை தாபிப்பதற்கு ஏற்பாடு செய்வதற்கும், அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேர் விளைவான கருமங்களை ஏற்பாடுசெய்வதற்குமானதொரு சட்டம்.

    6. CYBER SECURITY BILL (2019-05-22)
      இலங்கையின் தேசிய இணையப் பாதுகாப்பை நடைமுறைப்படுத்துவதற்கும், இலங்கையின் இணையப் பாதுகாப்பு நிறுவகத்தை நிறுவுவதற்கும், இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு மற்றும் தேசிய இணையப் பாதுகாப்பு நடவடிக்கை மையத்தின் வலுவூட்டலை வழங்குவதற்கும், இலங்கைக்குள் முக்கியமான தகவல் உள்கட்டமைப்பைப் பாதுகாக்க மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்களை வழங்குவதற்குமான ஒரு சட்டம்.

    7. இலங்கை அரசாங்கத்தின் டிஜிட்டல் சட்டங்கள் மற்றும் கொள்கைகளுடன் தொடர்புடைய ஏனைய சட்டங்கள், ஒழுங்குமுறைகள், சுற்றறிக்கைகள், வழிகாட்டுதல்கள்
      • PAYMENT & SETTLEMENT SYSTEMS ACT, No. 28 of 2005
      • PAYMENT DEVICES FRAUDS ACT No.30 of 2006
      • MOBILE PAYMENT GUIDELINES 2011_1e
      • MOBILE PAYMENT GUIDELINES 2011_2e
      • ELECTRONIC PAYMENTS TO GOVERNMENT INSTITUTIONS PF447E
      • ELECTRONIC PAYMENTS BY GOVERNMENT INSTITUTIONS 02_2013E
      • USE OF ELECTRONIC DOCUMENTS & ELECTRONIC COMMUNICATION FOR OFFICIAL USE –CIRCULAR
      • USE OF E-MAIL & ICT IN GENERAL IN GOVERNMENT BUSINESS




உசாத்துணைகள்
  1. https://www.wikipedia.org/
  2. https://www.icta.lk/
  3. http://www.commonlii.org/lk/