We all know what a Computer is?
It is an electronic device that processes the input according to the set of instructions provided to it and gives the desired output at a very fast rate.
Computers are very versatile as they do a lot of different tasks such as storing data, weather forecasting, booking airlines, railway or movie tickets and even playing games.
கணிப்பொறி என்றால் என்னவென்று நீங்கள் அனைவரும் அறிவீர்கள்
அது கொடுக்கப்பட்ட கட்டளைகளை உள்ளீடாகப் பெற்று, அதிவேகமாகச் செயல்பட்டு, பொருத்தமான வருவிளைவை வழங்கும் ஒரு மின்னணு சாதனம் ஆகும்.
கணிப்பொறிகள் தரவுகளைச் சேமிக்கவும், வானிலை முன்னறிவிப்பு, விமானம்-ரயில் போக்குவரத்து பயணச்சீட்டு முன்பதிவு, திரையரங்க நுழைவுச்சீட்டு முன்பதிவு போன்ற பல பணிகளையும், விளையாட்டு மற்றும் இதர பொழுதுபோக்கு அம்சங்களையும் செய்யும் பல்திறன் பெற்றவை.
Data
Data is defined as an unprocessed collection of raw facts, suitable for communication, interpretation or processing.
For example, 134, 16 ‘Kavitha’, ‘C’ are data. This will not give any meaningful message.
பல்வேறு வகைகளிலும் திரட்டப்படும் செயற்படுத்தப்படாத செய்தித் துணுக்கு தரவு எனப்படும்.
இது முறைவழியாக்கம் செய்வதற்கு ஏற்றது.
எடுத்துக்காட்டாக 134, 16, கவிதா, 'சி' போன்றவை தரவிற்கு உதாரணம்.
தரவு எந்த விளக்கமான தகவலையும் அளிக்காது.
Information
Information is a collection of facts from which conclusions may be drawn.
In simple words we can say that data is the raw facts that is processed to give meaningful, ordered or structured information.
For example Kavitha is 16 years old. This information is about Kavitha and conveys some meaning.
This conversion of data into information is called 'Data Processing'.
தகவல் என்பது முடிவுகளை எடுக்கக்கூடிய முறைவழியாக்கம் செய்யப்பட்ட தரவுகளின் தொகுப்பாகும்.
எளிமையாக கூறவேண்டுமெனில், தரவு என்பது சரியான பொருள் கொண்ட, முறைப்படுத்தப்பட்ட அல்லது கட்டமைக்கப்பட்ட தகவலை வழங்குவதற்கு முறைவழியாக்கம் செய்யப்பட்ட தரவுகளாகும்.
எடுத்துக்காட்டாக, கவிதாவின் வயது 16 என்ற கூற்று, கவிதாவைப் பற்றி சரியான பொருள் கொண்ட அர்த்தமுள்ள தகவலை சித்தரிக்கின்றது. தரவுகளை, தகவல்களாக மாற்றம் செய்யும் இந்த செயல்முறை 'தரவு முறைவழியாக்கம்' என்று அழைக்கப்படுகிறது.