Let us first have a look at the functional components of a computer.
Every task given to a computer follows an Input- Process- Output Cycle (IPO cycle).
It needs certain input, processes that input and produces the desired output.
The input unit takes the input, the central processing unit does the processing of data and the output unit produces the output.
The memory unit holds the data and instructions during the processing.
முதலில் நாம் ஒரு கணிப்பொறியின் செயல் பகுதிகளைப் பற்றிக் கற்போம்.
கணிப்பொறியில், கொடுக்கப்பட்ட ஒவ்வொரு பணியும், உள்ளீடு-முறைவழியாக்கம்-வருவிளைவு என்ற சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு செயலாற்றுகிறது.
கணிப்பொறியின் ஒவ்வொரு முறைவழியாக்கத்திற்கும் ஒரு சில உள்ளீடுகள் தேவை.
இந்த உள்ளீட்டை முறைவழிப்படுத்தி பொருத்தமான வருவிளைவை உருவாக்குகிறது.
உள்ளீட்டலகு, உள்ளீட்டைப் பெறுகிறது. மையமுறைவழியலகு தரவை முறைவழியாக்கம் செய்கிறது.
வருவிளைவலகு வருவிளைவை வெளியிடுகிறது.
நினைவகம் முறைவழியாக்கத்தின் போது தரவு மற்றும் கட்டளைகளை தேக்கி வைக்கிறது.
Input Unit
Input unit is used to feed any form of data to the computer, which can be stored in the memory unit for further processing.
Example: Keyboard, mouse, etc.
உள்ளீட்டலகு அனைத்து வகையான தரவுகளையும் கணிப்பொறிக்குள் உள்ளிடப் பயன்படுகிறது.
உள்ளிடப்பட்ட தரவுகள் முறைவழியாக்கத்திற்காக நினைவகத்தில் சேமிக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டு,
Central Processing Unit
CPU is the major component which interprets and executes software instructions.
It also control the operation of all other components such as memory, input and output units.
It accepts binary data as input, process the data according to the instructions and provide the result as output.
The CPU has three components which are Control unit, Arithmetic and logic unit (ALU) and Memory unit.
மையமுறைவழியலகு [CPU] என்பது, கணிப்பொறிக்கு வழங்கப்படும் கட்டளைகளைக், கணிப்பொறி
புரிந்துகொள்ளும் வகையில் மாற்றி அதனை முறைவழிப்படுத்தும் முதன்மையான பகுதியாகும்.
இது memory, input and output போன்ற மற்ற அனைத்துச் அலகுகளின் செயல்பாட்டைக் கட்டப்படுத்துகிறது.
இது தரவை உள்ளீடாக பெற்று, கொடுக்கப்பட்ட
கட்டளைகளின் படி முறைவழிப்படுத்தி, வருவிளைவை வெளியிடுகிறது.
CPU இல் மூன்று பகுதிகள் உள்ளன.
- Control unit (CU)
- Arithmetic and logic unit (ALU)
- Memory unit
Control Unit
The Control Unit controls the flow of data between the CPU, memory and I/O devices.
It also controls the entire operation of a computer.
CU ஆனது CPU, memory மற்றும் I/O devices இடையே
பரிமாறப்படும் தரவைக் கட்டுப்படுத்துகிறது.
மேலும், கணிப்பொறியின் முழுச் செயல்பாடுகளையும் இது கட்டுப்படுத்துகிறது.
Arithmetic and Logic Unit
The ALU is a part of the CPU where various computing functions are performed on data.
The ALU performs arithmetic operations such as addition, subtraction, multiplication, division and logical operations.
The result of an operation is stored in internal memory of CPU.
The logical operations of ALU promote the decision-making ability of a computer.
CPU இன் ஒரு பகுதியாக உள்ள ALU, பல கணக்கீட்டு செயல்களைத் தரவின் மீது நிகழ்த்துகிறது.
கூட்டல், கழித்தல், பெருக்கல், வருத்தல் மற்றும் தருக்க செயல்கள் போன்ற கணிதச் செயல்பாடுகளைக் ALU செய்கிறது.
CPU இல் உள்ள உள்-நினைவகத்தில் இதன் விளைவு சேமிக்கப்படுகிறது.
ALU இன் தருக்கச் செயல்திறனே கணிப்பொறியின் முடிவெடுக்கும் திறனை மேம்படுத்துகின்றது.
Output Unit
An Output Unit is any hardware component that conveys information to users in an understandable form.
Example: Monitor, Printer etc.
பயனர்கள் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் தகவலை வழங்கும் எந்தவொரு வன்பொருளும் Output Unit எனப்படும். எடுத்துக்காட்டு:
Memory Unit
The Memory Unit is of two types which are primary memory and secondary memory.
The primary memory is used to temporarily store the programs and data when the instructions are ready to execute.
The secondary memory is used to store the data permanently.
The Primary Memory is volatile, that is, the content is lost when the power supply is switched off.
The Random Access Memory (RAM) is an example of a main memory.
The Secondary memory is non volatile, that is, the content is available even after the power supply is switched off.
Hard disk, CD-ROM and DVD ROM are examples of secondary memory.
முதன்மை நினைவகம் மற்றும் இரண்டாம் நிலை நினைவகம் என இருவகை நினைவகங்கள் உள்ளன.
கட்டளைகள் நிறைவேற்றத் தயாராக இருக்கும்போது தரவு மற்றும் நிரல்களைத் தற்காலிகமாகச் சேமிக்க முதன்மை நினைவகம் பயன்படுகிறது.
தரவுகளை நிரந்தரமாகச் சேமித்துவைக்க இரண்டாம் நிலை நினைவகம் பயன்படுகிறது.
அதாவது, முதன்மை நினைவகம் அழிதகு நினைவகமாகும். முதன்மை நினைவகத்துக்கு மின்சாரம் நிறுத்தப்பட்டவுடன் அதில் சேமிக்கப்பட்டுள்ள அனைத்துத் தகவல்களும் அழிந்துவிடும்.
முதன்மை நினைவகத்திற்கு எடுத்துக்காட்டு:
- RAM - Random Access Memory
இரண்டாம் நிலை நினைவகம் அழிவுறா நினைவகமாகும். அதாவது இரண்டாம் நிலை நினைவகத்திற்கு மின்சாரம் நிறுத்தப்பட்டாலும் அதில் சேமி்க்கப்பட்டுள்ள அனைத்துத் தகவல்களும் அழியாமல் இருக்கும்.
இரண்டாம் நிலை நினைவகத்திற்கு எடுத்துக்காட்டுகள்:
